×

மகாராஷ்டிராவில் முன்னாள் உள்துறை அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மும்பை: பண மோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரி சச்சின்வாசி கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து மும்பை மாநகர காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய பரம்வீர் சிங் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் பார்கள், ஹோட்டல்கள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வசூலிக்குமாறு சச்சின்வாசியை கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இதன்பிறகு அணில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அணில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்….

The post மகாராஷ்டிராவில் முன்னாள் உள்துறை அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Maharashtra ,Mumbai ,Home Minister ,Anil Deshmukh ,Dinakaran ,
× RELATED நிதி மோசடியை விசாரிக்க வருமான...